

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் மற்றும் குடைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டதால் பொது இடங்களில் வைக்கக் கூடிய பெரிய விநாயகர் சிலைகளை கொண்டு வர போலீஸார் அனுமதிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து ஓர் அடி, ஒன்றரை அடி உயரமுள்ள சிறிய விநாயகர் சிலைகள், வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக விற்பனைக்கு வந்துள்ளன. காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட இடங்களில் இந்த விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு விநாயகர் சிலை ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் விநாயகர் குடைகள், பூ, பழங்கள் விற்பனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.