மணமகன் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு :

மணமகன் வீட்டில்  5 பவுன் நகை திருட்டு  :
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் நெசவுத் தொழிலாளி மோகன்ராஜ்(62). இவரது மகன் அருண்குமாரின் திருமணம், ஆரணியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு, வீட்டுக்கு மோகன்ராஜ் சென்றார். அப்போது பூட்டியிருந்த வீடு திறந்திருந்தது. வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.45 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து களம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in