

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு 1,55,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி நேற்று சேலம் வந்தது. சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 58,500 கோவிஷீல்டு, ஆத்தூருக்கு 5 ஆயிரம், தருமபுரிக்கு 20 ஆயிரம், கிருஷ்ணகிரிக்கு 13 ஆயிரம், நாமக்கல் மாவட்டத்துக்கு 58,500 கோவிஷீல்டு என மொத்தம் 1,55,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கப்பட்டது. சேலத்தில் இருந்து நான்கு சுகாதார மாவட்டத்துக்கும் தடுப்பூசியை சுகாதாரத் துறை அதிகாரிகள் பிரித்து அனுப்பி வைத்து வருகின்றனர்.