

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணி மண்டபம் கட்டப்படும் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு அறி வித்தது.
அதனடிப்டையில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே சமூக நீதி போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணியை ஆட்சியர் மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.