

மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெறுவதற்கான சிறப்பு மதிப்பீடு முகாம் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் சரவணன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் சாரு முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி முகாமை தொடங்கி வைத்தார். மேலும், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி, 2 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் என, மொத்தம் ரூ.5.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
பயிற்சி முகாம்