55 ஆயிரம் புத்தக பைகளை விநியோகிக்க நடவடிக்கை :

55 ஆயிரம் புத்தக பைகளை விநியோகிக்க நடவடிக்கை :
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த கல்வி யாண்டில் அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப் பைகள் தற்போது இருப்பில் உள்ளன. இவற்றில் முன்னாள் முதல்வர்கள் ஜெய லலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் உள்ளன. இந்த பைகளை நடப்பு கல்வியாண்டில் மாண வர்களுக்கு தடையில்லாமல் விநியோகம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் இருப்பில் உள்ள பைகளின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் படம் பொறித்த 55 ஆயிரம் புத்தகப் பைகள் இருப்பது தெரியவந்துள்ளது. விரைவில் இந்த புத்தகப் பைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in