பெங்களூரு சிறுவன் கொலை: தாய் உட்பட 3 பேர் கைது :

பெங்களூரு சிறுவன் கொலை: தாய் உட்பட 3 பேர் கைது :
Updated on
1 min read

பர்கூர் அருகே நடந்த பெங் களூரு சிறுவன் கொலையில் தாய் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் காரகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்லேட்டி கிராமத்தில் இருந்து உச்சன் கொல்லைக்கு செல்லும் சாலையில் மல்லேஸ்வரன் மலையடிவாரம் பகுதியில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி 10 வயதுடைய சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக பர்கூர் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெங்களூருவைச் சேர்ந்த நதியாவின் மகன் ராகுல் (10) என்பதும் அவர் பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை என்பதும் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட விவரம் தெரிந்தது.

மேலும், இதுதொடர்பாக பெங்களூரு போலீஸார் நடத்திய விசாரணையில், ராகுலை அவரது தாய் நதியா மற்றும் அவரது ஆண் நண்பர் சுனில்குமார் (30) மற்றும் சிந்து (25) ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீ ஸார் கூறும்போது, “நதியாவுடன் தவறான பழக்கத்துக்கு இடையூறாக ராகுல் இருந்ததால், சுனில்குமார், சிறுவனை கொலை செய்து சிந்துவின் உதவியுடன் சடலத்தை ஆந்திர மாநில காட்டுப்பகுதியில் புதைக்க கிருஷ்ணகிரி வழியாக குப்பம் வந்தபோது குரு விநாயனப்பள்ளி சோதனைச் சாவடியில் போலீஸார் இருப்பதை பார்த்ததும் தமிழக எல்லையில் உள்ள மலையடிவாரத்தில் சிறுவனின் உடலை வீசி சென்றுள்ளனர்” என்றனர்.

இதனிடையில், இவ்வழக்கை பர்கூர் காவல் நிலையத்துக்கு மாற்ற பெங்களூரு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in