விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு - சிறிய அளவிலான விநாயகர் சிலை விற்பனை அதிகரிப்பு :

குமாரபாளையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
குமாரபாளையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
Updated on
1 min read

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமாரபாளையத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலை விற்பனை களைகட்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. வீடுகளில் வைத்து வழிபட தடையில்லை. இதனால் பெரிய அளவிலான சிலைதயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

குமாரபாளையம் நகரப் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை விற்பனை களை கட்டியுள்ளது. வீட்டில் வைத்து வழிபடும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை மக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனர், என குமாரபாளைம் சிலை வியாபாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது :

குமாரபாளையத்தில் 20-க்கும்மேற்பட்ட விநாயகர் சிலை வியாபாரிகள் உள்ளனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி உள்ளிட்ட இடங்களில் இருந்து, விநாயகர் சிலைகளை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். பெரிய சிலைகள் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும்.

ஒரு கடைக்கு 200 முதல் 300 சிலைகள் விற்பனையாகும். கரோனா பரவல் காரணமாக அரசு விதித்துள்ள தடையால் சிலை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிறிய விநாயகர் சிலைகள் அதிகம் விற்பனையாகின்றன. இவை ரூ.50 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகின்றன, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in