

திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் வாணிபக் கழகத்தில் அரவை முகவர்களாக செயல்பட்டு வரும் தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்யப்படுகிறது.
மண்டலங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லை வாணிபக் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து அரிசியை கிடங்கில் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் புழுங்கல் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என திண்டுக்கல் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.