

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு நேற்று திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தெற்கு மாவட்ட திமுக சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோரும், மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி தலைமையில் மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோரும் தனித்தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செ யலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்தியக்குழு உறுப் பினர் டி.கே.ரங்கராஜன் உள் ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி என்.நடராஜன் தலைமையில் முன்னாள் அமைச்சர் என்.சிவபதி உள்ளிட்டோரும், மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் சோமு தலைமையில் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமமுக சார்பில் முன்னாள் அரசுக் கொறடா ஆர்.மனோகரன், முன்னாள் எம்எல்ஏ எம்.ராஜசேகரன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையிலும், பாஜக சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புறநகர் மாவட்டச் செயலாளர் இந்திரஜித் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையிலும், பாமக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் திலீப்குமார் தலைமையிலும், வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் தலைவர் ஹரி ஹரூன் தலைமையிலும், அகில இந்திய வ.உ.சி பேரவை சார்பில் லேணா லட்சுமணன் தலைமை யிலும், அகில இந்திய வஉசி மகாசபை சார்பில் பழனிவேல் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல, தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ப.குமார் வ.உ.சி.யின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி தலைமையில் வ.உ.சி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கரூரில்...
பாஜகவினர் மாவட்டத் தலைவர் கே.சிவசாமி தலைமையிலும், நாம் தமிழர் கட்சியினர் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வ நன் மாறன் தலைமையிலும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் தலைவர் கார்வேந்தன் தலைமை யிலும் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திருமானூரில்...
நிகழ்ச்சியில், வளநாட்டு வேளா ளர் சங்க தலைவர் முத்துக்குமரன், பொறுப்பாளர்கள் ஞானமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.