

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1992-94-ம் ஆண்டு படித்த மாணவர்களின் சங்கமம் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.
ஆசிரியர் தினவிழா, முன்னாள் ஆசிரியர்கள் - மாணவர்கள் சந்திப்பு மற்றும் பள்ளி வளர்ச்சிக்கான நலத்திட்டங்கள் வழங்கும் விழா என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கர் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன், பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவரும் பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான இ.முருகன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் பி.வேதபிரகாஷ் சிறப்புரையாற்றினார். மேலும் அவர் முன்னாள், இன்னாள் ஆசிரியர்களை கவுரவித்தார்.
மாணவர்கள் சங்கம் மூலம் ரூ.2.50 லட்சம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியை எம்ஜிஆர் பல்கலைக்கழக பேராசிரியர் பாலாஜி தொகுத்து வழங்கினார். இதில், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் முன்னாள் மாணவர் எம்.பருதிமால் கலைஞர் நன்றி கூறினார்.