சேலம் மாவட்டத்தில் - போரூராட்சி செயல் அலுவலர்கள் 9 பேர் பணியிடம் மாற்றம் :
சேலம் மாவட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் 9 பேர் மற்றும் 8 உதவி செயற்பொறியாளர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 30 பேரூராட்சிகள் உள்ளன. இதில், பணிபுரியும் 9 செயல் அலுவலர்கள் பல்வேறு ஊர்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் கருப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பொற்கொடி இடமாற்றம் செய்யப்பட்டு, முருகன் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தெடாவூர் பேரூராட்சிக்கு சரவணன், தேவூர் பேரூராட்சிக்கு அருண்குமார், வீரகனூர் பேரூராட்சிக்கு சாமி, ஏத்தாப்பூர் பேரூராட்சிக்கு விழிச்செல்வன், காடையாம்பட்டி பேரூராட்சிக்கு மயில்வாகனன், பேளூர் பேரூராட்சிக்கு ராமு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, பேரூராட்சிகளில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர்கள் 8 பேரை மாவட்டத்தின் பல்வேறு பேரூராட்சிகளுக்கு இடமாற்றம் செய்து, பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.
