

கலை, பண்பாட்டுத்துறை சார்பில், கலைஞர்களின் வயதுக்கு ஏற்ப கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி விருதுகள் வழங்கப்படுகின்றன.
தேனி மாவட்டத்தில் 2017, 2018, 2019-ல் தேர்வான 15 கலைஞர்களுக்கு ஆட்சியர் க.வீ.முரளிதரன் விருதுகளை வழங்கினார். மதுரை மண்டல கலை, பண்பாட்டு மைய உதவி இயக்குநர் செந்தில்குமார் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.