கரோனா தடுப்பூசி முகாமில் - சிறப்பு பரிசுகள் வழங்கல் :

கரோனா தடுப்பூசி முகாமில்  -  சிறப்பு பரிசுகள் வழங்கல்  :
Updated on
1 min read

சங்கரன்கோவில் கோமதி அம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 100 பெண்களுக்கு சேலை, 100 ஆண்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் செல்போன் எண்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எல்இடி டிவி, குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, குக்கர், தேய்ப்பு பெட்டி போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சாரதிராம் அறக்கட்டளையைச் சேர்ந்த ராமநாதன் செய்திருந்தார்.

 ராமச்சந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ராமையா, முருகன், முனீஸ்வரன் என்ற ராஜா, லெட்சுமணன், சரவணா தட்டெ ழுத்து மற்றும் சுருக்கெழுத்து பள்ளி,  லட்சுமி கோமதி ஆன் லைன் சென்டர், கே.எஸ்பி குரூப், லெட்சுமணன், கந்தசாமி ஆகியோர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in