வேலூர் கோட்ட அஞ்சலகங்களில் - செல்வமகள், பொன்மகன் : சேமிப்பு கணக்கு தொடங்க முகாம் :

வேலூர் கோட்ட அஞ்சலகங்களில் -  செல்வமகள், பொன்மகன் : சேமிப்பு கணக்கு தொடங்க முகாம் :
Updated on
1 min read

வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செல்வமகள், பொன்மகன் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, வேலூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு மற்றும் பொன்மகன் பொது வைப்பு நிதி தொடங்குவதற்கான சிறப்பு முகாம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 21-ம் தேதி வரை நடைபெறும் முகாமில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு குறைந்த பட்ச வைப்புத் தொகையாக ரூ.250 செலுத்தி செல்வமகள் சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.

அதேபோல், ஆண் குழந்தைகளுக்கு குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.500 செலுத்தி பொன்மகன் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். சமூக ஆர்வலர்கள் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்து ரூ.250 செலுத்தி செல்வ மகள் சேமிப்பு கணக்கை தொடங்கி அவர்களின் எதிர்காலத்துக்கான நிதி ஆதரவு அளிக்கலாம். மேலும், விவரங்களுக்கு வேலூர் தலைமை அஞ்சலகத்தை 0416-2223908 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in