

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மணியக்காரன்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, திருச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஆகியோர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூரில் வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.எர்ணாகுளம் குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவினர் 2 சிறுமிகளையும் மீட்டு தேனி மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அச்சிறுமிகளை தற்காலிகமாக காப்பகத்தில் வைக்கவும், பெற்றோரின் பொருளாதார மேம்பாட்டுக்கு உரிய வழிவகை செய்யவும் தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் உத்தரவிட்டார்.