திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊட்டசத்து மாதத்தை முன்னிட்டு கண்காட்சியை திறந்துவைத்த ஆட்சியர் ச.விசாகன். அருகில் திட்ட அலுவலர் பூங்கொடி.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊட்டசத்து மாதத்தை முன்னிட்டு கண்காட்சியை திறந்துவைத்த ஆட்சியர் ச.விசாகன். அருகில் திட்ட அலுவலர் பூங்கொடி.

திண்டுக்கல்லில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி :

Published on

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி தலைமை வகித்தார். கண்காட்சியை திறந்து வைத்து திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் கூறியதாவது:

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம், தனி நபர் ஊட்டச்சத்து, சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து இயக்கம் நடத்த மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் கொண்டாடப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் மகளிர், குழந்தைகள் ஆகியோரது ஆரோக்கியம் மற்றும் தனி நபர் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிறு தானியத்தில் செய்த உணவுகள், இணை உணவில் செய்த உணவுகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in