அந்தியூர் கோயிலுக்குச் சொந்தமான 10.25 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு :

அந்தியூர் கோயிலுக்குச் சொந்தமான 10.25 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு :

Published on

அந்தியூரை அடுத்த பட்லூரில் உள்ள வாகீஸ்வரர், சென்றாயப்பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 10.25 ஏக்கர் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூரில், நூறு ஆண்டுகள் பழமையான வாகீஸ்வரர் கோயில், சென்றாயப்பெருமாள் கோயில் மற்றும் கரிய காளியம்மன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 70 ஏக்கர் நிலம் உள்ளது.

இதில் சுமார் 12.40 ஏக்கர் நிலங்களை, அப்பகுதியில் உள்ள ஆறு பேர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். கோயில் நிலங்களை தங்களது பெயரில் பட்டா மாறுதல் செய்து வைத்திருந்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் நான்கு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு, கோயிலுக்குச் சொந்தமான 10.25 ஏக்கர் நிலத்தை சுவாதீனம் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அந்தியூர் வட்டாட்சியர் முன்னிலையில், கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டனர். அவ்விடத்தில், கோயிலுக்குச் சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in