

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 55 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலை யில், நேற்று 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 24 பேர், நகராட்சி பகுதிகளில் மேட்டூரில் 6, ஆத்தூர், நரசிங்கபுரத்தில் தலா 1, வட்டார அளவில் வீரபாண்டியில் 5, ஆத்தூர், கெங்கவல்லியில் தலா 4, சேலம், தலைவாசலில் தலா 3, காடையாம்பட்டி, கொளத்தூர், சங்ககிரியில் தலா 2, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூரில் தலா 1 என மாவட்டம் முழுவதும் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.