

திருச்சி மாவட்டம் மணப்பாறை இந்திரா நகரில் வசித்து வருபவர் சின்னசாமி. அதிமுக முன்னாள் எம்எல்ஏ. இவரது வீட்டின் போர்ட்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த காரை நேற்று காலை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், மணப்பாறை போலீஸார் வழக்குபதிவு செய்து, காரை திருடிச் சென்றது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.