சுத்தமல்லி காவல் நிலையத்துக்கு விருது :

சுத்தமல்லி காவல் நிலையத்துக்கு 2019-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையத்துக்கான விருதை, மாவட்ட எஸ்பி மணிவண்ணன் வழங்கினார்.
சுத்தமல்லி காவல் நிலையத்துக்கு 2019-ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையத்துக்கான விருதை, மாவட்ட எஸ்பி மணிவண்ணன் வழங்கினார்.
Updated on
1 min read

தமிழகத்தில் ஆண்டு தோறும் மாவட்ட மற்றும் மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்துக்கு, முதல்வர் விருது வழங்கப் படுகிறது. 2019-ம் ஆண்டுக் கான பரிசு திருநெல்வேலி மாவட்டத்தில் சுத்தமல்லி காவல் நிலையத்துக்கு கிடைத்துள்ளது. இப்பரிசை சேரன்மகாதேவி உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன், சுத்தமல்லி காவல் ஆய்வாளர் ஜீன்குமார் ஆகியோரிடம், மாவட்ட எஸ்பி மணிவண்ணன் வழங்கினார்.

கொலைக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ததற்கும், போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுத்தது, ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பராமரிப்பது, காவல் நிலையத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது ஆகியவற்றுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in