ஈரோட்டில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - கேரள மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் :

ஈரோட்டில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு -  கேரள மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்  :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 395 பள்ளிகளில், 9-ம் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நேரடியாக நேற்று தொடங்கின.

ண்ட நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர், தங்களது நண்பர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

பள்ளிகளைப் போலவே, ஈரோட்டில் நேற்று கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கின. உடல் வெப்ப பரிசோதனை, கிருமிநாசினி பயன்பாடு, சமூக இடைவெளி போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கரோனா தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஈரோடு கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் தங்கி கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் 72 மணி நேரத்திற்குள்ளாக, கரோனா பரிசோதனை மேற்கொண்டதற்கான சான்றிதழ் உள்ளவர்கள் மட்டும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப் பட்டனர்.

நாமக்கல் ஆட்சியர் ஆய்வு

இதனிடையே, பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதுபோல, நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியிலும் ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அனைவரும் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in