தாட்கோ திட்டங்கள் விழிப்புணர்வு முகாம் :

தாட்கோ திட்டங்கள் விழிப்புணர்வு முகாம் :
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை எனப்படும் தாட்கோ மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட, ஆலப்பட்டியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி வட்டார அணித்தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். தாட்கோ மாவட்ட மேலாளர் யுவராஜ் மற்றும் உதவி மேலாளர் ராஜ குருதாட்கோ துறையின் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு செயல்படுத்தப் படும் திட்டங்கள் மற்றும் அதற்கான தகுதிகள் பற்றி பேசினார்.

செயல் அலுலவர் பிரதீப்குமார் நன்றி கூறினார். செயல் அலு வலர்கள் ஆனந்த், ராஜசேகர்,திட்ட செயலர் மகாலிங்கம் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in