சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு - மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்கள் :

ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டது. இதை யடுத்து, சேலம் சோனா கல்லூரிக்கு மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்கள்.
ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டது. இதை யடுத்து, சேலம் சோனா கல்லூரிக்கு மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்கள்.
Updated on
1 min read

ஓராண்டுக்குப் பின்னர் கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், சேலம் சோனா தொழில் நுட்பக் கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் வந்தனர்.

கரோனா பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் தமிழகஅரசின் உத்தரவுக்கேற்ப நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில், அரசின் வழிகாட்டுதல்படி சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 50 சதவீதம் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் செந்தில் குமார் கூறும் போது, “மாணவ, மாணவிகள் கல்லூரிக்குள் வரும்போது, முகக்கவசம் அணிதல், உடல் வெப்பநிலை சரிபார்த்தல், தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வழிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டு, அனுமதிக்கப்பட்டனர்.

மாணவ, மாணவிகள் அனைவரும் கல்லூரிக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர்” என்றார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in