தவறு செய்யாவிட்டால் இபிஎஸ் பயப்பட வேண்டாம்: : டிடிவி.தினகரன் கருத்து :

தவறு செய்யாவிட்டால் இபிஎஸ் பயப்பட வேண்டாம்:   : டிடிவி.தினகரன் கருத்து  :
Updated on
1 min read

கோடநாடு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி எந்தத் தவறும் செய்யவில்லை என்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

திருச்சியில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பார்கள். எனவே, கோடநாடு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், அவர் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்லைக்கழகத்துடன் இணைப்பது தேவையில்லாத விஷயம். அதை அப்படியே தொடர அனுமதிப்பதுதான் பெருந்தன்மையான அரசுக்கு அடையாளம். அதை திமுகவிடம் நாம் எதிர்பார்க்க முடியாது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in