

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியில், கூடங்குளம் சுனாமி காலனியை சேர்ந்த ஆன்ட்ரோ அபினாஷ் (22) என்பவர், கடந்த 28-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கூடங்குளம் போலீஸார் வழக்கு பதிந்து, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை தேடிவந்தனர். இந்த வழக்கில் சந்துரு, பிரதீஷ், வினிஸ்டர், இருதயம் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் நிக்கோலஸ் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தேடப்படுகிறார்கள்.