சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது :

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.               படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் சட்டப்பேரவை அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மறியலில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்துதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அதிமுகஅமைப்பு செயலாளர் சுதாபரமசிவம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்தபோராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

இதேபோல், தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகில்முன்னாள் எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில், அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி

நாகர்கோவில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in