

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட மணப்படை வீடு பழைய தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள பிரதான மோட்டார் பழுதடைந்துள்ளது. இதை சரி செய்யும் பணி நடைபெறுகிறது. இதனால் பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 13 முதல் 16 மற்றும் 20 முதல் 25 ஆகிய பகுதிகளில் இன்று தொடங்கி வரும் 3-ம் தேதிவரை குறைந்த அளவே குடிநீர்வழங்க இயலும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.