உளுந்தூர்பேட்டை, ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் - மிகை மின்கட்டண புகார்: மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் ஆய்வு :

உளுந்தூர்பேட்டை, ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் -  மிகை மின்கட்டண புகார்: மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் ஆய்வு :
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை மின்பகிர் மானக் கழகத்தில் மிகை மின் கட்டணம் தொடர்பாக இந்து தமிழ் செய்தி எதிரொலியாக மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

உளுந்தூர்பேட்டையில் வசிப்பவர்களுக்கு கடந்த ஜூன், ஜூலைமாதங்களுக்கான மின் பயன்பாட் டுக் கட்டணத்தை குறிப்பிட்டு, அவரவர் செல்போன்களுக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளன. அதில், சிலருக்கு வழக்கமாக செலுத்தும் கட்டணத்தை விட6 மடங்கு வரை கூடுதலாக வந்து,அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கி றது. இன்னும் சிலருக்கு 2 முதல் 3 மடங்கு வரை கட்டணம் கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை மின்பகிர் மானக் கழகத்தில் மிகை மின் கட்டணம் தொடர்பாக நேற்று இந்து தமிழ் திசையில் செய்தி வெளியானது.

இதையடுத்து மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அருட்பெருஞ்ஜோதி உத்தரவிற்கிணங்க, ஆசனூர், எலவனாசூர்கோட்டை உதவிப் பொறியாளர்கள் மிகை மின்கட்டண புகார் எழுப்பிய மின் பயனீட்டாளர் இல்லங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக எலவனாசூர் கோட்டை மின்வாரிய உதவிப் பொறியாள கார்த்திக்கேயன் கூறுகையில், மின் மிகைகட்டணம் தொடர்பாக சில பயனீட்டாளர்களின் இல்லங்களுக்குச் சென்று ஆய்வு செய்ததாகவும், அதில் சிலர் மின் கணக்கீடு இயந்திரத்தில் இணைப்பு தவறுதலாக இருப் பதை அறிந்ததாகவும், அதை சரிசெய்ய பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

இதேபோன்று ஆசனூர் மின் வாரிய உதவி பொறியாளர் சில பயனீட்டாளர்களின் இல்லங்க ளுக்குச் சென்று, ஆய்வு செய்து, அவர்களிடம் மின்பயன்பாடு குறித்து எடுத்துரைத்ததாகவும், அதன்படி சிக்கனமாக பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டிருப் பதாகத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in