பாரதி நூற்றாண்டு நினைவு ஜோதி ஓட்டம் :

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு  சீவலப்பேரியில் இருந்து  தொடர் ஓட்டமாக  பாரதியார்  பயின்ற ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி  வகுப்பறைக்கு கொண்டு வரப்பட்ட ஜோதியை   மாணவர்கள்  பள்ளி நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். படம்: மு.லெட்சுமி அருண்

Updated on
1 min read

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு பாரதி பயின்ற பள்ளியான திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சீவலப்பேரியில் இருந்து தொடர் ஜோதி ஓட்டம் நடத்தினர். ஓட்டத்தை தொழிலதிபர் சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கிவைத்தார். ஜோதியை பாரதி பயின்ற வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டு வந்து, பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளிச் செயலாளர் செல்லையா வரவேற்றார். பள்ளித் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். ‘பாரதியும் இந்து கலா சாலையும்’ என்ற தலைப்பில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மகாதேவன் பேசினார். ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் ஏஎல்எஸ்.சண்முகம், சுரேஷ், தளவாய் திருமலையப்பன், கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், துணை முதல்வர் சேகர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த் துரையாற்றினர். தலைமை ஆசிரியர் உலகநாதன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in