விபத்தில் அண்ணன், தம்பி உயிரிழப்பு :

விபத்தில் அண்ணன், தம்பி உயிரிழப்பு :
Updated on
1 min read

ராசிபுரம் அருகே கன்டெய்னர் லாரி மோதியதில் சாலையோரம் நின்ற அண்ணன், தம்பி உயிரிழந்தனர்.

ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் தெற்குப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பெயின்டர் ராமசாமி (38). இவரது தம்பி ரங்கநாதன் (34. இவர்கள் இருவரும் நேற்று காலை நாமக்கல்லில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பெயின்ட் அடிக்கும் பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஏ.கே.சமுத்திரம் புறவழிச்சாலை யோரம் இருவரும் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து திருச்சி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற சகோதரர்கள் மீது மோதி சாலையோரப் பள்ளத்தில் உருண்டது.

இதில், நிகழ்விடத்திலேயே ராமசாமி, ரங்கநாதன் ஆகியோர் உயிரிழந்தனர். காயம் அடைந்த வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தமிழழகன் (22), ராசிபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in