காணாமல் போன 106 செல்போன்கள் மீட்பு :

மீட்கப்பட்ட செல்போன்களுடன் எஸ்பி நாதா மற்றும் போலீஸார்.
மீட்கப்பட்ட செல்போன்களுடன் எஸ்பி நாதா மற்றும் போலீஸார்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 30 காவல்நிலையங்களில் கடந்த2019-ம் ஆண்டு முதல் 2021-ம்ஆண்டு வரை சுமார் 500 செல் போன்கள் காணாமல் போனதாக புகார்கள் பெறப்பட்டன.

இதன் அடிப்படையில் எஸ்பி நாதா உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பதிவேடுகள் டிஎஸ்பி உமா சங்கர் தலைமையிலான போலீஸார் சைபர் கிரைம் போலீஸாருடன் இணைந்து செல்போன்களின் ஐஎம்ஐ எண்கள் மூலம் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான 106 மொபைல்கள் மீட்கப்பட்டன. அதன் உரிமையாளர்களிடம் நேற்று எஸ்பி நாதா ஒப்ப டைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in