

தூத்துக்குடி-நாசரேத் திருமண் டலத்தின் 2021-ம்ஆண்டுக்கான தேர்தல்கால அட்டவணைப்படி முதல்கட்டமாக ஆகஸ்ட் 16-ம் தேதி சபை மன்ற பிரதி நிதிகள், திருமண்டல பெருமன்ற பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதன் தொடர்ச்சியாக சேகர கமிட்டி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இரண்டு அணிகள் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் நாசரேத் சேகரமன்ற தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.