

திருப்பூர் செட்டிபாளையத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த முகமது இஸ்லாத் (29), முஜிபுர் ரஹ்மான் (26) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில்,அவர்களுடன் தங்கியிருந்த முகமது அன்வர் ஹூசைன் (27) என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில் திருப்பூரில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும்,வங்கதேச நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ் முகமது அன்வர் ஹூசேன் மீது 15 வேலம்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்தனர். பின்னர், அவரை கைது செய்து சென்னை புழல் சிறைக்கு அனுப்பிவைத்தனர்.