உளுந்தூர்பேட்டை அருகே - மாயமான சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு :

முகமதுசாகிப்
முகமதுசாகிப்
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை அருகே இரு நாட்களுக்கு முன் மாயமான சிறுவன், ஏரியில் சடலமாக மீட்கப் பட்டான்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாங்கம் கிராமத் தைச் சேர்ந்த தவ்ஹீத் ஆலம் மகன்முகமதுசாகிப் (9). உளுந்தூர் பேட்டை தனியார் பள்ளியில் 4-ம்வகுப்பு படித்து வந்தான். நேற்றுமுன்தினம் தெருவில் விளையா டிக் கொண்டிருந்தான். இரவு நெடுநேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சி அடைந்தபெற்றோர், பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்க வில்லை.

இதையடுத்து உளுந்தூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதனிடையே நேற்று பூ.மாம் பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் ஒரு சடலம் மிதப்பதை அறிந்த போலீஸார், தீயணைப்பு படையினரின் உதவியுடன் அங்குசென்று சடலத்தை மீட்டனர். அதுமாயமான சிறுவன் முஹம்மது சாகிப் சடலம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in