தரமற்ற அரிசியை விநியோகிக்க கூடாது : ரேஷன் ஊழியர்களுக்கு சிவகங்கை ஆட்சியர் எச்சரிக்கை

தரமற்ற அரிசியை விநியோகிக்க கூடாது :  ரேஷன் ஊழியர்களுக்கு சிவகங்கை ஆட்சியர் எச்சரிக்கை
Updated on
1 min read

ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசியை ஊழியர்கள் விநியோ கிக்கக் கூடாது. அதை நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட் சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரி வித்துள்ளார்.

சிவகங்கை மஜித்ரோடு கோட் டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ரேஷன் கடையில் நேற்று முன்தினம் விநியோகிக்கப்பட்ட அரிசி பழுப்பு நிறத்துடன் புழு, பூச்சியுடன் இருந்தது.

இதனால் விற்பனையாளருக் கும், கார்டுதாரர்களுக்கும் இடை யே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கார்டு தாரர்கள் அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து விற் பனையாளரை வேறு கடைக்கு ஆட்சியர் இடமாற்றம் செய்து உத் தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் அரிசி அரவை உரிமம் பெற்ற 14 அரிசி ஆலைகளில், 11-ல் பழுப்புநிற அரிசியை நீக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற 3 ஆலைகளில் இம்மாத இறுதிக்குள் இயந்திரம் பொருத் தப்படும். இதன் மூலம் இனி தரமான அரிசியை விநியோகம் செய்வது உறுதிப்படுத்தப்படும். ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி இருப்பில் இருந்தால், அதனை கார்டுதாரர்களுக்கு ஊழியர்கள் விநியோகிக்கக் கூடாது.

உடனடியாக அவற்றை நுகர் பொருள் வாணிபக் கழகக் கிடங் குகளில் ஒப்படைத்துவிட்டு தர மான அரிசியை வாங்கி விநி யோகிக்க வேண்டும்.

அதேபோல் முதியோர், மாற்றுத் திறனாளிகளின் விரல் ரேகையை பதிவு செய்ய முடியாவிட்டால், அதற்குரிய படிவத்தில் கை யொப்பம் பெற்று உணவுப் பொருட்களை வழங்க வேண்டும்.

இதற்காக கார்டுதாரர்களை அலையவிடக் கூடாது என்று தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in