விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல் :

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், கணக்கப் பிள்ளைவலசை, தேன்பொத்தை, குத்தப்பாஞ்சான் ஆகிய பகுதி களில் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கிழங்கு வகைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் சார்பில், அதிக விளைச்சல் தரும் புதிய ரகமான ரெக்சா மரவள்ளிக் கிழங்கு, சிறுதாரா என்ற சிறுகிழ ங்கு விதைகள் விவசாயி களு க்கு வழங்கப்பட்டன. மேலும் புதிய ரகங்களை பயிரிட்ட விவசாயி களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

விவசாயிகளுக்கு திருவனந்த புரம் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி மற்றும் பயிர் உற்பத்தித் துறை தலைவர் பைஜூ, முதன்மை விஞ்ஞானி முத்துராஜ், முதல்நிலை விஞ்ஞானி ஜெக நாதன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

இந்த புதிய ரகங்கள் தற்போது உள்ள ரகங்களை விட 50 சதவீதம் அதிகம் மகசூல் அளிக்கும். அதிக நாட்கள் பாதுகாக்க முடியும். பூச்சி நோய் தாக்குதலுக்கு உட்படாமல் இரட்டிப்பு மகசூல் தரும். தென்காசி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 300 ஏக்கரில் இந்த பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர். கீழப்பாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ராமச்சந்திரன் தோட்டக்கலைத் துறை திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

புதிய ரகமான ரெக்சா மரவள்ளிக் கிழங்கு, சிறுதாரா என்ற சிறுகிழங்கு விதைகள் வழங்கப்பட்டன. அதிகம் மகசூல் அளிக்கும். அதிக நாட்கள் பாதுகாக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in