தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்குங்கள் : வங்கிகளுக்கு ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவுரை

ராணிப்பேட்டை மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் பேசும் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
ராணிப்பேட்டை மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் பேசும் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.

கூட்டத்துக்கு, தலைமை தாங்கி மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசும்போது, ‘‘ராணிப் பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் மகளிர் குழுவினருக்கு சுமார் ரூ.350 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.60 கோடிக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை வங்கிகள் விரைவில் ஆய்வு செய்து கடன் வழங்க வேண்டும்.

அதேபோல், கரோனா ஊரடங்கு காலத்தில் தெருவோர வியாபாரிகள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். இவர்கள் கேட்கும் ரூ.10 ஆயிரம் கடனுதவியை அனைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும்.

மீன் வளர்ப்புக்கு மாவட்டத்தில் உள்ள 16 மீன் வளர்ப்பு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்பட்ட 222 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அதன் மீது தனிக்கவனம் செலுத்தி கடன் வழங்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மா ஆப்ரகாம், மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in