

திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்த பிரகாஷ் அனுப்பர்பாளையத்துக்கும், வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன் மதுவிலக்கு பிரிவுக்கும், நல்லூர் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கும், அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் ஆனந்த் வடக்கு குற்றப் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல வீரபாண்டி காவல் ஆய்வாளராக கீதா, திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளராக பிச்சையா, நல்லூர் காவல் ஆய்வாளராக ரமேஷ், அனுப்பர்பாளையம் போக்குவரத்து-தெற்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக சரவண ரவி, தெற்கு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளராக தமிழ்செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, மாநகரக் காவல் ஆணையர் வே.வனிதா வழங்கியுள்ளார்.