

முதுகுளத்தூர் அருகே நல்லுக்குறிச்சியைச் சேர்ந்தவர் காமாட்சி (65). இவர் நேற்று ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பரமக்குடி சென்றார். அப்போது காந்தக்குளம் முனியப்ப சுவாமி கோயில் அருகே பரமக்குடிக்கு ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் காமாட்சி இறந்தார். எமனேஸ்வரம் போலீஸார், கடலாடி அருகே பூதங்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வராஜை (36) கைது செய்தனர்.