100% தடுப்பூசி செலுத்திக்கொண்ட 2 கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டு :

100% தடுப்பூசி செலுத்திக்கொண்ட 2 கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் 2 ஊராட்சிகளில் 100 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் 100 சதவீத கரோனா தடுப்பூசி என்ற இலக்கை அடைய வேண்டி, அனைத்து ஊரகப் பகுதிகளிலும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சுகாதாரத் துறை மூலம் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆண்டிமடம் ஒன்றியம் கவரப்பாளையம், ஜெயங்கொண்டம் ஒன்றியம் மேலணிக்குழி ஆகிய 2 ஊராட்சிகள் 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமங்கள் என்ற இலக்கை எட்டியுள்ளன.

இதற்காக, அந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மேலணிக்குழி முத்துகுமாரசாமி, கவரப்பாளையம் சேரநாதன் மற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in