

திருநெல்வேலி மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு மற்றும் விநியோகத்தில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஏதுவாக, குறைதீர் கூட்டம் நாளை 26-ம் தேதி மாலை 4 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.