கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் - மரக்கன்றுகள் நடும் விழா :

கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் தொடங்கி வைத்தார்.
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 1988-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, தாங்கள் பயின்ற கல்லூரியை பசுமையாக்கும் முயற்சியாக மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் தொடங்கி வைத்தார்.

வேளாண்மை கல்லூரி வளாகம் மற்றும் தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் இருந்து கல்லூரிக்கு வரும் பிரதான சாலையின் இருபுறங்களிலும் சுமார் 2,000 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் கே.இறைவன் அருட்கனி அய்யநாதன் முன்னிலை வகித்தார். கிரீன் சூப்பர் கிள்ளீஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் கங்காதரன் காவேரி, நிர்வாக அறங்காவலர் எஸ்.சின்னதுரை, கல்லூரி முன்னாள் மாணவர்களான கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மா.ரா.சீனிவாசன், திருச்சி வாழை ஆராய்ச்சி மைய முதன்மை அறிவியலாளர் இரா.செல்வராஜன், வேடசந்தூர் மத்திய புகையிலை ஆராய்ச்சி மைய முதன்மை அறிவியலாளர் பொன்.மணிவேல் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in