விழுப்புரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் :

விழுப்புரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

விழுப்புரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக் கழகம், விழுப்புரம் நகரில் டைடல் பார்க் ஆகியவை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விழுப்புரம் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் நியமிக்கப்பட்டு தற்காலிக கட்டிடத்தில் பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்தது.

தற்போது இப்பல்கலைக் கழகத்தை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. மேலும் விழுப்புரம் நகரில் அமைக்கப்படுவதாக அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட டைடல் பார்க் தற்போது திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனை கண்டித்து நேற்று விழுப்புரத்தில் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளர் பசுபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் ராமதாஸ், ஜானகிராமன், திருப்பதி பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in