தடுப்பூசி சிறப்பு முகாம்: சேலம் மாநகராட்சி அழைப்பு :

தடுப்பூசி சிறப்பு முகாம்: சேலம் மாநகராட்சி அழைப்பு :
Updated on
1 min read

சேலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், அமைப்புகள் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாநகர பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அனைத்து சங்கங்கள், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தடுப்பூசி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த மாநகராட்சி கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறை மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜோசப்பை 75981 30884 என்ற செல்போன் எண்ணிலும், பரப்புரையாளர்களின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமாரை 82485 13998 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in