நகை வியாபாரிகள் கடையடைப்பு செய்து ஆர்ப்பாட்டம் :

நகை வியாபாரிகள் கடையடைப்பு செய்து ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

தங்க நகைகளின் தரத்தை குறிக்க அவற்றில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் நம்பிக்கையுடன் தங்க நகைகளை வாங்குகின்றனர். இதற்கிடையே மத்திய அரசு தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. தங்க நகை களிலும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண்ணை பதிவு செய்ய வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையம் (பிஐஎஸ்) அறிவித்துள்ளது.

இதையடுத்து, இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என் பதை வலியுறுத்தி தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நகைக் கடைகளை நேற்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை அடைத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இதேபோல, தஞ்சாவூர் காசுக் கடைத் தெரு, அய்யங்கடைத் தெரு, தலைமை அஞ்சலகம் உள் ளிட்ட இடங்களில் வெவ்வேறு நகை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 180 நகைக் கடைகளும் நேற்று காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை அடைக்கப்பட்டிருந்தன. மேலும், பெரம்பலூர் கடைவீதியில் நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் கள் நேற்று 100-க்கும் மேற்பட்ட நகைக் கடைகளை அடைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in