விப்பேடு கிராமத்தில் இளைஞர் கொலை :

விப்பேடு கிராமத்தில் இளைஞர் கொலை :
Updated on
1 min read

காஞ்சிபுரத்தை அடுத்த விப்பேடு கிராமம் பள்ளிக்கூடத்தான் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி குட்டியம்மாள். இவர்களது இரண்டாவது மகன் பிரேம்குமார்(24). இவர், மாற்று சமூகத்தைச் சேர்ந்த சினேகாவை(20) காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிரேம்குமார் மீது மணல் கடத்தல், கஞ்சா விற்பனை மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்ற பிரேம்குமார், பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், விப்பேடு காலனியில் உடலில் வெட்டுக் காயங்களுடன் பிரேம்குமார் சடலம் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார், அவரது சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேம்குமாரின் அண்ணன் சாந்தகுமார், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டார். அதேபோல, கஞ்சா விற்பனை செய்துவந்த இவரது தம்பி உமேஷ்குமார்,2 ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் பிரேம்குமாரும் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in