

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து வியாபாரிகளும் தொழில் உரிமம் உடனடியாக பெற வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித் துள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் உணவகங்கள், தேநீர் கடைகள், ஜவுளிக்கடைகள், மளிகைக்கடை, பாத்திரக்கடை மற்றும் பேன்சி ஸ்டோர்ஸ் உட்பட 25-க்கும் மேற்பட்ட கடைகள் நடத்த உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்டணம் செலுத்தி உரிய உரி மத்தை பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், தொழில் நடத்தி வரும் கடை உரிமையாளர்கள் இந்த விதி முறையை பின்பற்றுவது இல்லை. பலர் உரிமம் இல்லாமலேயே கடையை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி களிலும் உள்ள கடைகளுக்கு உரிய உரிமம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணை யாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் உள்ள கடை களுக்கு உரிமம் பெற வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதி காரிகள் கூறும்போது, “தனியார் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 385 கடைகள் இயங்கி வருகின்றன. இவர்களில், பெரும்பாலானவர்கள் உரிமம் பெறவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கான உரிமத்தை பெற நகராட்சி அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி உரிமத்தை கடை உரிமையாளர்கள் பெற வேண்டும்.
‘சீல்’ வைக்கப்படும்
எனவே, திருப்பத்தூர் நகராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வரும் அனைத்து வகை வியாபாரிகளும் தங்களது கடைகளுக்கான உரிமத்தை உடனடியாக விண் ணப்பித்து பெற வேண்டும். ஏற் கெனவே, உரிமம் பெற்றிருந்தால் அதை புதுப்பிக்க வேண்டும்’’ என்றனர்.