ஆரணியில் காவல் துறையினர் திடீர் ஆய்வு :

ஆரணியில்   காவல் துறையினர் திடீர் ஆய்வு  :
Updated on
1 min read

ஆரணி காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையிலான காவல் துறையினர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் நேற்று ஆய்வு செய்தனர்.

பேருந்துகளில் அதிகளவில் பான் மசாலா பொருட்கள் கடத்தப்படுவதால், அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் முகக் கவசம் அணியாமல் பயணம் செய்த பயணிகளை எச்சரித்து முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அப்போது, கூட்ட நெரிசலில் மிகுந்த கவனத்துடன் பேருந்து களில் ஏறி இறங்க வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தினர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகளை பறிக்கும் கும்பல் சுற்றி வருவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நகை மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுரை வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in