

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோவின்) மூலமாகஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு குறுகியகால (ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள தாட்கோவின் www.training.tahdco.com என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மாணவ, மாணவியருக்கு போக்குவரத்துப் படி வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.
மேலும், தாங்கள் பயின்றபயிற்சி தொடர்பான தொழில்தொடங்கிட, http://.application.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்து தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க ஆவண செய்யப்படும். ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.